லங்கை மற்றும் பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் நலன்களுக்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரால் உருவாக்கப்பட்டது ரெப்கோ வங்கி. தென்னகம் முழுவதும் கிளை பரப்பி நிற்கும் இந்த வங்கியிலுள்ள மக்களின் பணம் 8,200 கோடிக்கு தற்போது ஆபத்து சூழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியிருக்கிறார் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் நிறுவிய இயக்குநர் திருவேங்கடம்.

Advertisment

repuco

இதுகுறித்து திருவேங்கடத்திடம் நாம் பேசியபோது, ""கலைஞர் ஆட்சியின்போது (1969) அவர் எடுத்து முன்முயற்சியில் மத்திய அரசு மற்றும் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநில அரசுகளின் மூலதன பங்களிப்புடன் துவக்கப்பட்டதுதான் ரெப்கோ. இதில் பெரும் பான்மை பங்களிப்பு மத்திய அரசுதான். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கூட்டுறவு சங்கம் இது. தாயகம் திரும்பியோர் தமிழகத்தில் மட்டும் தற்போது சுமார் 30 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களின் மறுவாழ்வு வளர்ச்சிக்காக பல்வேறு சேவைகளை செய்துவருகிறது ரெப்கோ.

ரெப்கோவில் தாயகம் திரும்பியோர் மற்றும் அவர்கள் அல்லாத பொதுமக்கள் (நாமினல் உறுப் பினர்) என இரண்டு கேட்டகிரியில் டெபாசிட் தொகை பெறப்படுகிறது. ஆனால், கடந்த 14.05.2015-ல் தீர்ப்பளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஆணையை மேற்கோள் காட்டி, repucoநாமினல் உறுப்பினர்களிடமிருந்து (பொதுமக்கள்) டெபாசிட் வாங்குவதை நிறுத்துமாறு ரெப்கோ வங்கியின் சேர்மனாக இருக்கும் தமிழக அரசின் பொதுத்துறையின் முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்.சுக்கு 2017-ல் ஒரு உத்தரவை (எ.சர்.10/2/2005-தஐந/ஙஉ,22.12.2017) பிறப்பிக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதன்படி, தாயகம் திரும்பியோர்களிடமிருந்து மட்டுமே டெபாசிட் வாங்க வேண்டும்.

Advertisment

இந்த உத்தரவினால் ரெப்கோவிலுள்ள தங்களின் ஆதிக்கம், பாதிக்கப்படும் என உணர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி, பிரதமர் மோடிக்கு 31.1.2018-ல் எழுதிய கடிதத்தில், "டெபாசிட் வாங்குவதில் தற்போதைய நிலையையே மெயின்டெயின் பண்ணுமாறு எனது அதிகாரி களை கேட்டுக்கொண்டுள்ளேன்' என தெரி வித்திருக்கிறார். முதல்வருக்கு இதற்கான அதிகாரம் கிடையாது. ஏனெனில், இது மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்திலுள்ள நிறுவனம். ஆனாலும், உச்சநீதிமன்றம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஆணைகளுக்கு எதிராக இப்போ தும் டெபாசிட் பெறப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியின் தவறான பணப்பரிவர்த்தனைகளுக்காக ரெப்கோவை பயன்படுத்த முடியும் என்பதால், ரெப்கோவில் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவே இப்படி கடிதம் எழுதியுள்ளார் முதல்வர்.

பொதுவாக, வங்கிகளில் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு 2 கோடி ரூபாய்க்கும் மேலே ரொக்கமாக பணம் செலுத்தினால், டெல்லியில் மத்திய நிதி அமைச்சகத்திடமுள்ள ஃபைனான் சியல் இண்டெலிஜெண்ட் யூனிட் (எஒம) உடனடி யாக அதனைக் காட்டிக்கொடுத்து விடும். அதற் கேற்ப இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் இந்த எஃப்.ஐ.யூ.வில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரெப்கோ ஒரு வங்கி கிடையாது. அது ஒரு கூட்டுறவு சங்கம். ரெப்கோவிற்கு ரிசர்வ் வங்கியின் லைசன்ஸ் இல்லை; காசோலை வசதி இல்லை. ஆர்.பி.ஐ.யின் கட்டுப்பாட்டில் ரெப்கோ வராததால், எஃப்.ஐ.யூ.வில் ரெப்கோ இணைக்கப்பட வில்லை. அதனால் எத்தனை கோடிகள் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை நடந்தாலும் மத்திய நிதி யமைச்சகத்தால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், வங்கிபோல செயல்படுவதால் டெபாசிட் குவிகிறது.

வங்கிகளில் போடப்படும் மக்க ளின் பணத்துக்கு, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள ’டெபாசிட் இன்சூரன்ஸ் கிரடிட் கேரண்டி கார்ப்பரேசன்’ (உஒஈஏஈ) என்கிற இன் சூரன்ஸ் நிறுவனம்தான் பாதுகாப் பளிக்கிறது. ஒரு வங்கி நட்டமானால் வெளிக்கடன்கள் வசூல் பண்ணமுடியாது. மக்களின் டெபாசிட் பணத்துக்கு பாதிப்பு ஏற்படும். அந்த நேரத்தில், பொது மக்களின் பணத்துக்கு மேற்கண்ட இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்வதால் டெபாசிட் தொகையை அந்த நிறுவனம் திருப்பித் தந்துவிடும்.

Advertisment

லைசன்ஸ் இல்லாததால் ரெப்கோவில் போடப்படும் டெபாசிட் தொகைகளுக்கு இன் சூரன்ஸ் பாதுகாப்பில்லை. இதனால் மக்களின் டெபாசிட் தொகை சுமார் 8,200 கோடி ரூபாய் தற்போது ஆபத்தில் இருக்கிறது. இந்த நிலையில், டெபாசிட் வாங்க அதிகாரிகளுக்கு முதல்வர் எடப் பாடி உத்தரவிட்டதால் மக்களிடமிருந்து டெபாசிட் தொகையை வாங்கிக் குவித்து வருகிறது ரெப்கோ.

ரெப்கோவின் நிகர லாபம் கடந்த வரு டத்தைவிட 50 சதவீதம் குறைந்துள்ளது. வாராக் கடன்களும் அதிகரித்துள்ளன. டெபாசிட்டு களுக்கு இன்சூரன்சும் இல்லைங்கிறதினால மக்களின் பணத்துக்கு ஆபத்து காத்திருக்கிறது. அதனால்தான் ரிசர்வ் வங்கியிடம் புகார் தெரிவித்துள்ளேன்''’ என்கிறார் திருவேங்கடம்.

repuco

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து ரெப்கோவின் சேர்மனும் முதல்வர் எடப்பாடியின் செயலாளருமான செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டபோது,’’""உறுப்பினராகிவிட்டாலே அவர் களிடமிருந்து டெபாசிட் வாங்கலாம் என மத்திய அரசின் கெஜட் நோட்டிஃபிகேசனில் சொல்லப்பட் டுள்ளது. வங்கியாகப் பயன்படுத்தக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகமோ, ரிசர்வ் வங்கியோ எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காசோலை வசதி கிடையாது. ரெப்கோவின் நிகர லாபத்தில் எந்த சரிவும் இல்லை. வருடம் தோறும் அரசிடம் டிவிடெண்ட் கொடுத்து வருகிறோம். டெபாசிட்டு களுக்கு பாதுகாப்பு உண்டு''‘என்றார்.

"கெஜட் நோட்டிஃபிகேசனை காட்டமுடி யுமா' என நாம் கேட்டதற்கு, ""எங்களிடம் இல்லை. ரெப்கோ எம்.டி.யிடம் இருக்கும்'' என்றார். அதே போல, "ரிசர்வ் வங்கியின் லைசன்ஸ் இருக்கிறதா? மக்களின் டெபாசிட்டுகளுக்கு எந்த வகையில் பாது காப்பு இருக்கிறது?' என்ற கேள்விகளுக்கும் நேரடி யாக பதிலளிக்காத செந்தில்குமார், ‘""ரெப்கோவி லிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சிலரால் இப்படி பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. எந்த கேள்வியாக இருந்தாலும் ரெப்கோவின் எம்.டி.யை கேளுங்கள்''’என்பதோடு முடித்துக்கொண்டார்.

காசோலை வசதி இல்லை என்கிற நிலையில், கடந்த 2018-19 ஆண்டிற்கான தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையான 1 கோடியே 42 லட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையை கடந்த 2019-ல் முதல்வர் எடப்பாடியிடம் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். சும் ரெப்கோவின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா வும் வழங்கியுள்ளனர். இது எப்படி சாத்தியம் என அப்போதே சந்தேகம் எழுந்தது. ரெப்கோவின் நிகர லாபத்தில் சரிவு இல்லை என நம்மிடம் சொல்கிறார் செந்தில்குமார். ஆனால், ரெப்கோவின் வருவாய் புள்ளிவிவரங்களின்படி 2018-19 நிதியாண்டில் 107 கோடியாக இருந்த நிகர லாபம், 2019-20 நிதியாண்டில் 56 கோடியாக இருக்கிறது. வாராக்கடன்களின் நிலையும் அதிகரித்திருக்கிறது

இந்த நிலையில், ரெப்கோ வழங்கும் கடன் குறித்து தொடரப் பட்ட ஒரு வழக்கின் விசாரணை கடந்த 3-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு வந்தபோது, "ரெப்கோ ஒரு வங்கி கிடையாது... அது ஒரு கூட்டுறவு சங்கம்' என தெரிவித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழல்களில்தான், "ரெப்கோ மூலம் எத்தனை கோடிகளை அனுப்பினாலும் மத்திய நிதி அமைச்சகத்தால் கண்டுபிடிக்க முடியாது என்கிற ஓட்டையை பயன்படுத்தி, தேர்தல் கால பணப்பட்டுவாடாவை ரெப்கோமூலம் செய்யலாம்' என அ.தி.மு.க. தலைமை திட்டமிடுகிறது. உதாரணத்திற்கு, சென்னையிலிருந்து 50 கோடி ரூபாய் சேலத்துக்குப் போகவேண்டும் என ஆட்சியாளர்கள் நினைத்தால், சேலத்தில் உள்ள ரெப்கோ வங்கி யிலிருக்கும் ஒரு அக்கவுண்ட்டிற்கு சென்னையில் பணத்தை டெபாசிட் செய்தால் அடுத்த நிமிடம் சேலத்தில் எடுத்துக்கொள்ள முடியும்.

அதுபோல பல அக்கவுண்டில் பல கோடிகளை அனுப்ப முடியும். மேலும், தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 3 லட்சம் பேர் ரெப்கோவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஓட்டுக்காக அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்ற பெண்களுக்கும் பணத்தை பட்டுவாடா செய்ய வாய்ப்பு உண்டு.

தேர்தல் வெற்றிக்காக மிகக்கனமான பட்ஜெட்டை போட்டு வைத்திருக்கும் ஆளும்கட்சி, கண்டெய்னர்களிலோ, வாகனங்களிலிலோ பணத்தைக் கடத்தினால் பிடிபடுவதற்கு வாய்ப்பு இருப்பதை கவனத்தில்கொண்டு, அத்தகைய பண பரிவர்த்தனைக்காக ரெப்கோவை பயன்படுத்த திட்டமிடுவதாகத் தெரிகிறது. "ரெப்கோவின் சேர்மனாக இருக்கும் டாக்டர் செந்தில்குமார், முதல்வர் எடப்பாடியின் செயலாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார் என்பது உற்றுக் கவனிக்க வேண்டிய விசயம்' என்கிறார்கள் வங்கியை முழுமையாக அறிந்தவர்கள்.